12 அக்டோபர், 2007

பெங்களூருவில் தமிழர்களின் அலும்பு...

பெங்களூரில், தமிழர்களுக்கு பிரச்சனை வருவது என்பது சாதாரணமான ஒன்று, எப்படா எதாவது கலாட்டா வரும், தமிழ் மக்களைப் போட்டு அடிக்கலாம் என்று எதிர்பார்ப்பவர்கள் போலவே, கன்னட மக்கள் இருப்பதாய் தோன்றும்(எந்த பிரச்சனை வரட்டும், ஓசூர் சாலையில் ஒரு பேருந்தாவது எரியும், அடிதடி நடக்கும் நம்மாட்கள் மேல்! நம்ம ஆளுங்க மட்டும் சும்மாவா, இங்க கேள்ளுங்க இவர்களின் அட்டகாசத்தை. பெங்களூரில் முக்கியமான சாலைகளில் ஒன்று "ரெசிடென்சி ரோட்" அந்த சாலையில் எழுதப் பட்டிருப்பது "தனித் தமிழ் சேனை"...

இன்னொரு முக்கியமான இடம் "மகாத்மா காந்தி" சாலையைத் தாண்டி, கஸ்தூரிபாய் சாலையில்(ஆளுங்களை பார்த்தீர்களா, சாலை பெயரில் கூட இருவரையும் பிரிக்காமல் உள்ளதை), நம்ம மக்கள் செய்திருக்கும் வேலையைக் கேளுங்கள்.. இவை பெங்களூரில் மையப் பகுதியில் அமைந்திருக்கும் இடங்கள்... இப்படி செய்தால் யாருக்குத் தான் கோபம் வராது...?

3 இடங்களில் "தமிழே உலகின் முதல் மொழி" என்றும் 2 இடங்களில் "தனித்தமிழ் சேனை" என்றும் எழுதப்பட்டுள்ளது... அதுவும் நான் பெங்களூரு வந்ததிலிருந்து இவை உள்ளன(3 வருடங்களாக), யாரும் கண்டுக்கமாட்டார்களா அல்லது அழிக்க முடியாத அளவு நம்ம மக்கள் எழுதியுள்ளார்களா தெரியாது.

அது மட்டுமா, ஏதாவது விசேஷம் வந்து விடக் கூடாது, சத்தமாக தமிழ் பாடல்களை வைத்துவிட வேண்டியது, (ஏதாவது கன்னட பாடல் தமிழில் ரீ-மிக்சாயிருந்தால் போதும் உடனே காப்பி என்று கிண்டல் வேறு) அல்லது ஜோகி(பரட்டை தமிழில்) பாட்டை விட்டால் இவனுங்களுக்கு வேறு பாட்டே கிடைக்காது என்று நக்கல் விட வேண்டியது. கர்நாடகாவில் நல்ல பிரபலமான ஒரு திரைப்பட நடிகரைக்கூட நம் மக்களுக்குத் தெரியாது, அவர்களுக்கோ நம்ம ராம்கி வரை எல்லோரையும் தெரியும். நம்ம ஆளுங்களா ராஜ்குமாரையே(நடிகர்) யாருன்னு கேட்பார்கள்., அவர்களுக்கு வரும் பாருங்க கோபம்,நமக்கு சிரிப்புதான் வரும்னு வைங்களேன்(எனக்கெல்லாம் இங்கு வரும் வரை தெரியாது)

கன்னடம் தெரிந்தாலும், தமிழில் அல்லது ஆங்கிலத்தில் உரையாட வேண்டியது (என்னையும் சேர்த்து தான்), அதுமட்டுமில்லாமல் கன்னடமெல்லாம் தமிழிலிருந்து தான் வந்தது என்று வேறு கூறிக்கொண்டு அலையவேண்டியது, பேருந்து ஓட்டுநர்களுக்கெல்லாம் வரும் பாருங்கள் கோபம், சென்னையிலெல்லாம் யாருக்கு கன்னடம் தெரியுது/தமிழ் விட்டு எதுவும் தெரியாது, அங்கு வேறு மொழியில் எப்படி பேச முடியும், இவங்க மட்டும் இங்க வந்தும் தமிழ் பேசி அலைவது தான் வேலை என்று கோபப்படுவார்கள். சென்னையிலெல்லாம் பேருந்துகளில் ஆங்கிலத்தில்

எதாவது ஹோட்டலுக்குப் போனாலோ, ஷாப்பிங்காப்பிளக்ஸிற்கு போனாலோ, சென்னை மதிரி வராது, அங்க உள்ள சாப்பாடு மாதிரி வராது என்று கூறிக்கொண்டே சாப்பிடுவார்கள், நம்ம மக்கள் துவங்கும் ஹோட்டல்களில் தான் அதிக கூட்டமும் இருக்கும்...

தமிழ் படம் ஒன்று ரிலீஸ் ஆகக்கூடாது, பலத்த பாதுகாப்புடன் இங்கு வெளிவரும்(சிவாஜிக்கு "போரம்" முன் அத்தனை பாதுகாப்பு)... சிவாஜிபடத்தில் கத்தினால் உதைப்போம் என்று கூறியே உள்ளே அனுப்பிய கதைகளும் உண்டு, கன்னட படங்கள் நம் 60 களில் வந்த படம் போலுள்ளது என்று கிண்டல் செய்தால் அப்படி தான் பண்ணுவார்கள்...

அவர்கள் வெருத்துப் போய், ஏண்டா உன் ஊரிலேயே இருக்க வேண்டியது தான ஏன் இங்க வர என்று கேட்டால் போதும், "எங்க ஊரில் எல்லோரும் அறிவாலிகள், அங்கு வேலை கிடைப்பது கடினம், இங்கு உங்க மக்களுக்கு இருக்காதுனு தான் வரோம்" என்பார்கள் நம் மக்கள்...

இப்படியெல்லாம் செய்தா உதைக்காமலா என்றாலும், உதைத்துவிடுவார்களா...? விட்டுவிடுவோமா... (வாங்கிக் கொள்வோமோ...????) என்றும் மனதில் படுகின்றது...! அதான் நாம... எந்த பெங்களூரு வாழ் தமிழர்களிடம் கேட்டாலும், பெங்களூரு தான் பிடிக்கும் என்று தான் கூருவார்கள்... ஆனாலும் நம் மக்களின் தமிழ் பற்று உள்ளதே புல்லறிக்க வைக்குது போங்க... நம்ம மக்கள் இங்குவிடும் அலும்பு உள்ளதே, உலக மகா அலும்பு...

30 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வள்ளி அவர்களே,

நானும் பெங்களுர் தமிழன் தான்..ஆனால் நிங்கள் சொல்லுவது போல் பெங்களுர் சிறந்தது என்று சொல்பவன் அல்ல..சென்னை சென்னை தான்.. இங்கே என்ன இருக்கு ஊர் சுற்ற ..Forum விட்டல் Central..Central விட்டல் Forum..வேறென்ன இருக்கு..விழாகளில் தமிழ் பாட்டு போடுவது நாம் அல்ல..அவர்கள் தான்.
எங்கள் தெருவில் விநாயகர் சதுர்தியின் போது இசை நிகழ்ச்சி நடந்தது..அப்போது கன்னட பாடல் பாடும் போது அமைதியாய் இருக்கும் கூட்டம் தமிழ் பாடல் பாடும் போது பாருங்கள் சத்தத்தை.என்ன விசில்..என்ன கூச்சல்..இந்த விழாவை ஏற்பாடு செய்ததே கன்னடர்கள் தான்..
நான் பெங்களுர் வந்து 3 வருடம் ஆகிறது..இதுவரை கன்னடத்தில் ஒரு வார்த்தை பேசியது இல்லை...இது யார் தவறு..கன்னடத்தில் பேச இதுவரை அவசியம் ஏற்பட்டது இல்லை.

அன்புடன்,
அனானி..

கொங்கு ராசா / Raasa சொன்னது…

தலைப்ப பார்த்து என்னமே எதோன்னு ஆர்வமா வந்துட்டேன்.. இருந்தாலும் நல்ல காமெடியான பதிவு.. நன்றி.

நந்தன் சொன்னது…

உங்களைச் சொல்லி தவறில்லை. தமிழன் புத்தியே இது தானே. நம்ம ஆட்கள் நிறைய பேர் காவிரி பிரச்சினையில் கூட கர்நாடகாவிற்கே சப்போர்ட் செய்வதை பார்த்திருக்கிறேன். வெளி ஊர்களில் அவர்கள் 10 பேர் சேர்ந்து இருந்தால் உடனே அவர்கள் கொடியை ஏற்றி விடுகிறார்கள்.(அனேகமாக இந்தியாவில் தனி கொடி வைத்திருக்கும் ஒரே மாநிலம் கர்னாடகாவாகத் தானிருக்கும்). ராஜ் குமார் இயற்கையாக மரணமடைந்ததற்கே 5 பேரைக் கொன்ற இந்த மடையர்கள் சிவாஜி பத்தி எல்லாம் பேசினால் எவ்வளவு ஆக்ரோஷமாக வாதாட வருவார்கள் என்று நீங்கள் பார்த்ததில்லை போலிருக்கிறது. அவர்கள் தமிழ் திரைப்படங்களுக்கு விதித்த தடை எல்லாம் அறிந்திருக்கிறீர்களா. அங்கு பேருந்து போர்ட் நம்பர் கூட கன்னடமே. சென்னையில் ஆங்கிலமும் இருக்கும்............. இப்படி நிறைய சொல்லலாம்............

Voice on Wings சொன்னது…

நேர்மையான வரிகள்.

அதே சமயம், பெங்களூரிலுள்ள கடைநிலை மக்களில் பெரும்பாலோர்் தமிழர்களே, என்ற உண்மையையும் குறிப்பிட்டாக வேண்டும். இது ஏன் அவ்வாறு உள்ளது என்று தெரியவில்லை. பாலும் தேனும் ஓடும் தமிழகத்தில் கூலி வேலை செய்து பிழைப்பதற்குக் கூடவா வழியில்லை?

interior tamilan சொன்னது…

பாலும் தேனும் ஓடும் தமிழகத்தில் கூலி வேலை செய்து பிழைப்பதற்குக் கூடவா வழியில்லை?
----------
i think you work for it co in chennai. pls do a reality check. come out of your ac room!

Bee'morgan சொன்னது…

நல்ல பதிவு வள்ளி.. ஆனால் இதற்காக தமிழர்களை முழுவதும் குற்றம் சொல்லிவிடமுடியாது என்றுதான் நான் நினைக்கிறேன். நான் பெங்களுருக்கு வந்த இந்த ஒரு சில மாதங்களிலேயே, பல கசப்பான அனுபவங்களைச் சந்தித்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக உடல் உழைப்பைச் சார்ந்து வாழும் கன்னடர்கள் மத்தியில், தமிழர்களைப் பற்றிய எதிர்மறையான பிம்பமே பதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பிம்பம் ஏற்பட, தமிழர்களும் ஒரு வகையில் காரணம்தான். அந்த பிரச்சனைகளுக்குள் இப்போது சிக்க வேண்டாம்.. மேலும் நீங்கள் கூறிய, "தமிழே உலகின் முதல் மொழி" "தனித்தமிழர் சேனை" விபரீதங்களை நானும் கண்டிருக்கிறேன்.. நீங்கள் குறிப்பிட மறந்த மற்றுமொரு பகுதி, மெஜஸ்டிகிலிருந்து சேலம் செல்லும் ரயில் தடம்.. இத்தடத்தில் பயணித்ததால், ஜன்னல் வழியே நிச்சயம் பார்க்கமுடியும்.. குறிப்பாக கன்டொன்மெண்ட் ரயில் நிலைத்திற்கு வெகு அருகில் ஒரு சில சுவர்களில் கண்டிருக்கிறேன்.
அடுத்து நீங்கள் கூறிய ராம்கி விஷயத்துக்கு வருவோம். தயவுசெய்து தமிழ் சினிமாவையும் இங்குள்ள சினிமாவையும் ஒப்பிடாதீர்கள். தென்னிந்ததியாவிலேயே தமிழ்சினிமாவிற்கு ஒரு தனியிடம் உண்டு.. தொழில்நுட்ப ரீதியிலும் சரி, கலைஞர்கள் ரீதியிலும் சரி, படங்களின் வகையிலும் சரி கோடம்பாக்கம் ஒரு கோட்டைதான்.. சரி.. சரி. இத்தோட போதும்.. பின்னூட்டடமே ஒரு பதிவு அளவுக்கு வந்துடப்போகுது.. :)
பி.கு:: நீங்கள் குறிப்பிட்ட பல அலும்புகளை நாங்களும் தினம்தினம் அரங்கேற்றிக்கொண்டுதானிருக்கிறோம்.. :-D

அம்புலி சொன்னது…

வள்ளி அவர்களுக்கு.

நீங்கள் பிரிகடியர் சாலை சென்றது உண்ட ...
அங்கு சிலையில் உள்ள கல்வெட்டில் தமிழ் தான் எழுதி இருக்கிறர்கள்..
தமிழ் மக்கள் பல 100 வருடஙள் முன்பே ..பெங்களுரில் குடியேரி இருக்கிறார்கள்...

பெங்களுர் தலைநகரம் ஆனாது 1950 பின்னர் தான் ..

அரவிந்தன் சொன்னது…

//சும்மாவா, இங்க கேள்ளுங்க இவர்களின் அட்டகாசத்தை. பெங்களூரில் முக்கியமான சாலைகளில் ஒன்று "ரெசிடென்சி ரோட்" அந்த சாலையில் எழுதப் பட்டிருப்பது "தனித் தமிழ் சேனை"...//


இதனை யார் எழுதியது என்றும் எனக்கு தெரியும்.இதிலென்ன தவறு கண்டீர்கள். பெங்களுர் என்பதால தமிழ் என்ன உலகின் கடைசி மொழியாக மாறிவிடுமா..உலகின் எந்த விடத்திலும் தமிழே முதன் மொழி.


//அது மட்டுமா, ஏதாவது விசேஷம் வந்து விடக் கூடாது, சத்தமாக தமிழ் பாடல்களை வைத்துவிட வேண்டியது, (ஏதாவது கன்னட பாடல் தமிழில் ரீ-மிக்சாயிருந்தால் போதும் உடனே காப்பி என்று கிண்டல் வேறு) அல்லது ஜோகி(பரட்டை தமிழில்) பாட்டை விட்டால் இவனுங்களுக்கு வேறு பாட்டே கிடைக்காது என்று நக்கல் விட வேண்டியது.//

தமிழ் வீட்டு விஷேங்களில் தமிழ் பாட்டு போடாமல் வங்காள,ஒரியா பாட்டா போடுவார்கள்.?

//
கர்நாடகாவில் நல்ல பிரபலமான ஒரு திரைப்பட நடிகரைக்கூட நம் மக்களுக்குத் தெரியாது, அவர்களுக்கோ நம்ம ராம்கி வரை எல்லோரையும் தெரியும். நம்ம ஆளுங்களா ராஜ்குமாரையே(நடிகர்) யாருன்னு கேட்பார்கள்., அவர்களுக்கு வரும் பாருங்க கோபம்//

சும்மாயிருங்க வள்ளி,உங்களை மாதிரி இப்ப வந்தவங்களுக்கு வேண்டுமான ராஜ்குமார் தெரியாமா இருக்கலாம்.இங்கேயெ இருக்கிற தமிழர்கள் எல்லோருக்கும் ராஜ்குமார் நல்லா தெரியும்.

//அதுமட்டுமில்லாமல் கன்னடமெல்லாம் தமிழிலிருந்து தான் வந்தது என்று வேறு கூறிக்கொண்டு அலையவேண்டியது//

இப்படி சொல்றதுல உங்களுக்கென்ன கஷ்டம்.உண்மைதானே உங்களுக்கென்ன கசக்குது.

அன்புடன்
அரவிந்தன்

RASEEGAI சொன்னது…

nice infos ,keep writting..all the best.

ஸ்ரீசரண் சொன்னது…

சுவற்றில் கிறுக்குவது வேண்டுமானால் அலும்பாக இருக்கலாம்
எதையுமே கட்டாயத்தின் பேரில் கொண்டு வர முடியாது

பெரும்பான்மையானவர்களுக்கு தமிழ் புரிவதால் நாம் வேறு ஒரு மொழியைப் பேசி ஏன் கஷ்டப் பட வேண்டும்.

பூர்வீகத் தமிழர்களிடம் யாரிடமாவது பேசிப் பாருங்கள்
முன்னே இருந்த பெங்களூர் வேறு இப்போதிப்பது வேறு

பெயரில்லா சொன்னது…

un imsai thaanga mudiyala..... unna yellam yaaru yelutha sonnathu...


unna marriage pannikkiravanai ninaichathan paavama irukku

செந்தழல் ரவி சொன்னது…

ஏனுங்க...

பெங்களூர் தமிழ் சங்கம் என்ற அமைப்பு எங்க இருக்குன்னு தெரியுமா ?

அல்சூர் ஏரியை சுற்றிவந்தால் மெட்ராஸ் ரெஜிமெண்ட் என்று ஆயிரத்து எண்ணூறுகளில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு...

இந்த பதிவு போன்றதொரு அரைவேக்காட்டுத்தனமான பதிவை இது வரை பார்க்கவில்லை நான்...

இந்த பின்னூட்டம் வரலைன்னா என்ன, தனிப்பதிவா போட்டு தாளிச்சுறவேண்டியதுதான்...

மாற்றுக்கருத்து எழுதினா வெளியிடனும்...அரவிந்தன் பின்னூட்டம் வெளியிடப்படாதபோதே தெரிகிறது...

பெயரில்லா சொன்னது…

அம்மாடி வள்ளி தமிழக் கொஞ்சம் திருத்தி எழுது தாயீ

பனிமலர் சொன்னது…

வெங்களூர் வாழ்க்கை கண் முன்னே வந்து செல்கிறது இடுக்கையை படிக்கும் போது. மல்லேசுவரம், மின்னனு நகரம், பேருந்து நிலையங்கள், சிவாட்சி நகரக கடைத்தெரு, காந்தி சாலை செட்டி நாடு உணவகம், கென்டகி கோழி உணவகம், மடிவாலா, நிம்கான்சு........

கன்னட திரைபடங்களில் அம்சலேகா அசத்தும் இனிய பாடல்கள்....ஞாயிறு தோரும் மதிய உணவுக்கு பின் நிறம்பி வழிந்த வண்ணம் செல்லும் பேருந்துகளும், திரையருங்குகளும்..........

முதலில் தமிழ் படங்களுக்குத்தான் செல்வோம், இடம் இல்லை என்றால் அடுத்து இந்தி படங்களுக்கு முயலுவோம் அங்கேயும் இடம் இல்லை என்றால், ஆங்கில படங்களுக்கு முயலுவோம். அப்படியும் இல்லை என்றால் கடைதெருவில் காலம் கழித்துவிட்டு இரவு உணவுக்கு தேடி பிடித்து மெல்ல உண்டு சோகமாக வீட்டிற்கு போவோம்......

குமுதம், ஆனந்த விகடன், இன்னும் பல பத்திரிக்கைகளை எங்களுக்கா அந்த கடைக்காரர் எடுத்துவைத்து கொடுப்பார்.......அப்படியே தெக்கான் கெறால்டும் தான்........

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.........

மும்பையில் மட்டுங்கா வாங்க, அங்கே கூட ஒரு வார்த்தை கூட இந்தியில் பேசாமலே எல்லாம் வாங்கலாம் போகலாம், வெங்களூர் என்ன வெங்களூர்.......

பெயரில்லா சொன்னது…

A Stupid post.. a complete wrong version of Bangalore Tamil

இ.கா.வள்ளி சொன்னது…

//நல்ல பதிவு வள்ளி.. ஆனால் இதற்காக தமிழர்களை முழுவதும் குற்றம் சொல்லிவிடமுடியாது என்றுதான் நான் நினைக்கிறேன். //

//உங்களைச் சொல்லி தவறில்லை. தமிழன் புத்தியே இது தானே. நம்ம ஆட்கள் நிறைய பேர் காவிரி பிரச்சினையில் கூட கர்நாடகாவிற்கே சப்போர்ட் செய்வதை பார்த்திருக்கிறேன்.//

//பூர்வீகத் தமிழர்களிடம் யாரிடமாவது பேசிப் பாருங்கள்
முன்னே இருந்த பெங்களூர் வேறு இப்போதிப்பது வேறு//

//A Stupid post.. a complete wrong version of Bangalore Tamil//

மக்களே இன்று மிகவும் வேலைப்பலு, அதன் காரணமாக மற்றும், கெ-பிராக்ஸி உயிரை வாங்கிய காரணமாக பின்னூட்டங்களை உடனுக்குடன் வெளியிட முடியவில்லை...

இதை காமெடியான ஒரு பதிவு என்று நான் சொல்லித் தான் புரியுமளவில், என் எழுத்து நடை மோசமாக இருந்தால் திருத்திக்கொள்கின்றேன்...

இ.கா.வள்ளி சொன்னது…

தழல் அண்ணாச்சி
//
இந்த பின்னூட்டம் வரலைன்னா என்ன, தனிப்பதிவா போட்டு தாளிச்சுறவேண்டியதுதான்...

மாற்றுக்கருத்து எழுதினா வெளியிடனும்...அரவிந்தன் பின்னூட்டம் வெளியிடப்படாதபோதே தெரிகிறது...
//

இதைக்கேட்ட நீங்கள்/சொன்ன அவர் பின்னூட்டமிட்ட நேரத்தையும், அதன் பின் பின்னூட்டங்கள் வந்துள்ளனவா என்றும் சேர்த்து புரிந்துகொண்டிருக்க வேண்டும்... மேலும் இதை நான் நகைச்சுவைக்காகத்தான் எழுதினேன்...

//இப்படியெல்லாம் செய்தா உதைக்காமலா என்றாலும், உதைத்துவிடுவார்களா...? விட்டுவிடுவோமா... (வாங்கிக் கொள்வோமோ...????) என்றும் மனதில் படுகின்றது...! // இதுவும் நான் எழுதியது தான்... இதையெல்லம் விட நாங்களும் அலும்பு விட்டுக்கொண்டு தான் திரிகின்றேம்... அதனால் தான் இவையெல்லாம் தெரிகின்றது, இந்த லாஜிக்கூட புரியவில்லையா?
//பெங்களூர் தமிழச்சியின் இந்த பதிவை படித்துவிட்டு அடக்க மாட்டாமல் சிரித்து வயிறை புண்ணாக்கி கொண்டேன்.....
//

அதற்காகப் போடப்பட்ட பதிவு தான் நான் வெற்றி பெற்றுவிட்டேன்

//தனித்தமிழ் சேனை என்று ரெண்டு மூனு இடத்தில் எழுதி இருக்காம்...அம்மாடி அது தமிழ்ல தான எழுதி இருக்கு ? அதை படிச்சுட்டு கன்னடாக்காரன் தமிழனை உதைப்பான் என்றால் அதைவிட அரைவேக்காட்டுத்தனம் என்ன இருக்கு ?//

அது ஆங்கிலத்தில் இருக்குனு நான் சொல்லலையே... கொஞ்சம் விட்டா நீங்க, அந்த காலத்தில இங்கு இருந்த தமிழ் மக்கள் தான் அதை எழுதினாங்கனுல சொல்லுவிங்க போல... நானொன்றும் இங்கு தமிழ் எப்போது வந்தது, தமிழர்கள் எண்ணிகை எவ்வளவு என்றெல்லாம் கூறவில்லை.... கொஞ்சம்வீட்டா ஆங்கிலேயெர்களிடம் நீங்க இங்க தானே இருந்திங்க உங்க இஷ்டத்திற்கு வாங்கனுல சொல்லுவிங்க போல...

அய்யா,இது அப்படியும் நகைசுவைக்காக எழுதிய பதிவு... நான் சீரியஸாயெல்லாம் போடலை.. நீங்க தான் ஸீரியஸா எடுத்திட்டு போட்டிங்கன்னா நான் என்ன பண்ணுவது...

இ.கா.வள்ளி சொன்னது…

//un imsai thaanga mudiyala..... unna yellam yaaru yelutha sonnathu...

unna marriage pannikkiravanai ninaichathan paavama irukku//

உங்கள வாங்க வாங்கனு நான் கூப்பிட்டனா நீங்க வரலை? அப்படித்தான் நானும்...
உங்களுக்கு என்ன இப்ப போச்சின்றேன்....

செந்தழல் ரவி சொன்னது…

வெளங்கீரும் !!!

பெயரில்லா சொன்னது…

தூத்தெறி தமிழைக் கிண்டுவதில் என்ன நகைச்சுவை.இதுல தமிழின் மேன்மை தொன்மைன்னு வேறு.அற்பனுக்கு வாழ்வு வந்த கதைதான்.

இராம்/Raam சொன்னது…

/அய்யா,இது அப்படியும் நகைசுவைக்காக எழுதிய பதிவு... நான் சீரியஸாயெல்லாம் போடலை.. நீங்க தான் ஸீரியஸா எடுத்திட்டு போட்டிங்கன்னா நான் என்ன பண்ணுவது...//

அப்பிடின்னு நீங்க சொன்னதுகப்புறம் தான் படிச்சி பார்த்தேன்... ஒரு இடத்திலே கூட சிரிப்பே வரலை.... :))

நட்சத்திரக்கோவ், மூணு வருசம் இங்க இருக்கேன்னு சொல்லுறீங்க, இம்புட்டு தான் உங்களாலே பெங்களூரை பத்தி எழுதமுடிஞ்சதா??? :)

இராம்/Raam சொன்னது…

//கொங்கு ராசா / Raasa said...

தலைப்ப பார்த்து என்னமே எதோன்னு ஆர்வமா வந்துட்டேன்.. இருந்தாலும் நல்ல காமெடியான பதிவு.. நன்றி.//

ஆஹா...... ராசா செம குத்து விட்டுருக்கீங்க போலே..... :))

நல்லவன் சொன்னது…

உஸ்ஸ் அப்பாடா
இதுதான் காமெடியா
யாராச்சும் சிரிங்கப்பா

சின்ன அம்மிணி சொன்னது…

நகைச்சுவைக்காக எழுதினா சரி. ஆனா தமிழர்கள் பெரும்பாலாக இருக்கும் இடத்தில் தமிழ்தான் இருக்கும். வெளிநாடுகளில் எல்லா மொழிகளுக்கும் இருக்கும் சுதந்திரம் இந்தியாவில் ஒரு இந்திய மொழிக்கு இல்லேன்னா எப்படி

இ.கா.வள்ளி சொன்னது…

//உஸ்ஸ் அப்பாடா
இதுதான் காமெடியா
யாராச்சும் சிரிங்கப்பா//

பொது வாழ்வில் இதல்லாம் சகஜமப்பா

கோவி.கண்ணன் சொன்னது…

வள்ளி,

இந்தியாவில் எந்த மாநிலத்திலுமே இல்லாத நிலவெறி கர்நாடக மக்களிடம் தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் (இங்கே வெறும் தமிழ்தேசியம் என்று வார்த்தைகளைத் தான் சொல்கிறார்கள்) கர்நாடக வரைபடத்தை வைத்துக் கொண்டு அது ஒரு தனிநாடுபோல் காட்டுவார்கள். மஞ்சள் நிறத்தில் ஒரு மாநில கொடி இந்த கூத்தெல்லாம் கர்நாடகாவில் தான் பார்க்க முடியும்.

இன்னும் 1989 னில் வந்த ஒரே ஹிட்டு படமான ப்ரேம லோக தான் அவர்களுக்கு ஆஸ்தான படம், அதிலுள்ள பாட்டுத்தான் கன்னட ஹிட்டுப் பாட்டு, இதையெல்லாம் கேள்விப்பட்டால் தமிழனென்னா மற்ற மாநிலத்துக் காரர்கள் கூட டென்சன் அடையாமால் வேறு என்ன செய்வது ?
:)

thiru சொன்னது…

திரு.வள்ளி அவர்களுக்கு, தப்பும் தவறுமான செய்திகளை நகைச்சுவைக்காகக் கூடத் தெரிவிக்க வேண்டா...........
ஒருவர் பெங்களூரில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் குடியிருந்த்தாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஒரு காலத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பகுதிதான் பெங்களூர்.

பெயரில்லா சொன்னது…

Without studying indepth, this article is written. This is completely half-baked.

Better ask some tamil/mudaliar family, who was settled in bengalrau long time back to Know the facts.

Sridhar Venkat சொன்னது…

நீங்கள் ஒரு பக்கத்தைதான் பார்த்திருக்கிறீர்கள் போல. பெங்களூருவில் தமிழைவிட தெலுங்கர்கள் அதிகம். பல ஆந்திர உணவகங்கள் இங்கு பிரசித்தி. அடுத்து மலையாளிகள். பல சூப்பர் மார்க்கெட்கள் வளைகுடா மலையாளிகளோடதுத்தான்.

திரைப்படங்களை பொறுத்த மட்டில் மிக அருமையான இயக்குன்ர் புட்டன்னா, ஆனந்த் நாக், சங்கர் நாக் போன்றவர்கள் பல அரிய படங்களை கொடுத்திருக்கிறார்கள்.

ராஜ்குமார் கன்னடத்தில் பெரிய ஹீரோ என்றாலும் அவர் பிறந்தது, படித்தது எல்லாம் சென்னைதான். உங்களுக்கு அவரை தெரியாதது அவருடைய இழப்பல்ல :-).

கர்நாடகத்தின் வட எல்லையில் அமைந்திருக்கும் பெல்காமில் மராத்தியர்கள் ஆதிக்கம் அதிகமிருக்கும். சமீபத்தில் பெல்காம் மஹராஷ்டிராவிற்கு சொந்தம் என்று போராட்டமெல்லாம் நடந்தது. சட்டசபையைக்கூட அங்க நடத்தினார்கள்.

இந்த மாதிரி எல்லையில் இருக்கும் ஊர்களில் இந்த மாதிரி மொழி கலப்புகள் சகஜம். அதை மட்டும் வைத்து கொண்டு ஒரு மொழியையோ அதன் வளமையையோ எடை போட முடியாது. உதாரணமாக சென்னை தமிழ் உருவானதே இந்த மாதிரி கலப்பினால்தானே. தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, உருது போன்ற பல மொழி வார்த்தைகள் சென்னை தமிழில் அங்கம் வகிக்கும்.

தமிழகத்தில் தெலுங்கு செட்டியார்கள், கன்னட லிங்காயத்கள் தமிழகத்தில் பல சங்கங்கள் அமைத்து கல்யாண மண்டபங்கள் போன்று பல தொழில்கள் நடத்தி வருவதை பார்த்திருக்கிறேன்.

அப்படி பார்த்தால்... பெங்களூரு தவிர்த்து கர்நாடகாவின் உட்பகுதியில் தமிழர்களின் ஊடுருவல் மிகவும் சொற்பம்தான்.

திருப்பதி, பெங்களூரு, சென்னை, பாலக்காடு போன்ற எல்லை பட்டினங்கள் எதுவும் விதிவிலக்கல்ல என்றுதான் தோன்றுகிறது.

பெயரில்லா சொன்னது…

Neenga innum valaranum sister . Horlicks kudinga