8 அக்டோபர், 2007

காசே தான் கடவுளடா!!!

வளர்ந்து வரும் நவீன காலத்தில், வேகமாக நகருகின்றநேரத்தில், விட்டுவிடுகின்ற இன்பங்களும், துன்பங்களும் அதிகம்... இரவு 9.30 மணிவரைக் கூட அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் ஆண் நண்பர்களைப்(திருமணமான) பார்க்கும் போது, அவர்களின் மனைவி அவர்களை எதிர்பார்க்க மாட்டார்களா என்று தோன்றும், என் தம்பி வீட்டிற்கு வராவிட்டால் கூட எனக்கு எரிச்சலும், கோபமும் வரும், இத்தனைக்கும் நானும் அலுவலகம் சென்று தான் வந்திருப்பேன்.. வீட்டிலேயே இருக்கும் பெண்கள் பாவம் தான். தேவையான வசதிகள், அளவுக்கதிகமான பணம், அனைத்திற்கும் இயந்திரம், அதில்லாமல் வேலையாள், தொலைப்பேசியில் கேட்டால் வந்து விடும் மளிகை சாமான்கள் மட்டும் போதுமா அவர்களுக்கு? என்ன தான் செய்வது வீட்டில்? பணத்தைத் தேடும் முயற்சியில் பலவற்றை நாம் இழக்கின்றோம்... அனைத்திற்கும் பணமே மூலதனமாக உள்ளது, தேவையற்ற இடங்களிலிம் கூட..!

பணம் சம்பாதிக்கும் வரை, எத்தனை வயதானாலும் கல்யாணம் செய்து கொள்ளாத ஆண்கள், நிறைய பணம் வந்த உடன் திருமணத்திற்கு அவசரப்படுவார்கள், மேலும் குறைந்த வயதிலேயே நிறைய பணம் சம்பாதிக்கும் ஆண்களும்! அதே போல் தான், பெண்கள் சிறு வயதாயிருந்தாலும் நல்ல வரன்(நன்றாக சம்பாதிக்கின்ற) வந்தால் போதும் பெண் வீட்டில் கட்டி கொடுத்துவிடுவார்கள்! பணம் மட்டுமே சார்ந்த ஒன்றா திருமணமும் பந்தமும்? இதனால் தான் இன்னோரு பக்கம் சில பெண்கள் துன்பப்படுகின்றார்கள், நான் நிறைய வரதட்சணையாவது கொடுத்து என் பெண்ணைக் கட்டிக் கொடுத்துவிடுவேன்(நல்ல சம்பாதிக்கும் வரனுக்கு) எனும் போது தான், சாதாரண ஆண்களும் வரதட்சணையில் குளிர் காய நினைக்கின்றார்கள்.."நான் அவனில்லை" என்று ஏமாற்றுகின்றார்கள்...!

என் பாட்டி, அவர்களுடைய புக்ககம் வந்த போது அத்தனை சீர் கொண்டு வந்தார்கள், வண்டி வண்டியாய் வந்தது, எப்பொழுது பிறந்த இடம் சென்றாலும் திரும்ப வரும் போது அத்தனை சீர் வரும் என்று அவர்கள் நாத்தனார்கள் அத்தனை பெருமையாகப் பேசுவார்கள்! அந்த திமிரில் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள் என்றும் சேர்த்து பேசுவார்கள்! எல்லா செயலுக்கும் எதிர் செயல் உண்டு என்பது மிகவும் உண்மை!

அது மட்டுமா என் அம்மா இருக்கின்றார்களே படித்தவர், வேலைக்குச் செல்பவர், அறிவாளியும் கூட என் தம்பிக்கு அறிவுறை கூருவார்கள் பாருங்கள்..."தம்பி, அக்காவை எப்போதும் பார்த்துக்கணும், நிறைய செய்யனும்" அது இது என்று... விடுதியில் இருந்தால் திருவிழா நாட்களன்று அவனிடம் பலகாரங்களைக் கொடுத்து என்னிடம் கொடுத்துவிட்டு வரச்சொல்வார்கள்(பழக்குகின்றார்களாம்), அவனும் வருவான், பார்த்தால் அதில் சிறிது "வேற்பிலைக் கொழுந்துகள்" இருக்கும்..! கேட்டால் எதாவது "வியாக்யாணம்" கூறுவார்கள்...! அவனை இப்படிப் பழக்கினால், அவன் "கிழக்குச் சீமையிலே"யில் வருபதைப் போல் கற்பனைப் பண்ணிக் கொண்டு, அக்காவிற்கு நிறைய வரதட்சணைக்கொடுத்தாவது கட்டிக்கொடுக்க ஆசைப்படுவான்.. அதோடு நிறுத்துவானா? அவன் மனைவியிடமும் எதிர்பார்ப்பான்! அதான் ஒரு பேச்சு இருக்கின்றதே, அண்ணன், தம்பி இல்லாதா வீட்டில் பெண் எடுக்காதே என்று!

சிறு குழந்தைகள் கூட தன் அப்பா சம்பளத்திற்கு இவ்வளவு தான் செய்ய முடியும் என்று புரிந்து கொண்டு, இருப்பதை வைத்து இன்புறும் போது, தான் சம்பாதிப்பதை வைத்து இன்புறாத ஆண்களும், தன் பெண்ணை தன் வசதியை மீறி கட்டிக்கொடுக்க விரும்பும் ஆண்களும் இருப்பது எத்தனை சுயநலம்.. பணம் எல்லாவற்றையும் கொடுக்காது/கொடுக்கின்றது என்பதால் தான் இத்தனை சமூக அவலங்கள்....!

பணம் என்ற ஒன்றில்லை என்றால், அல்லது அதைத் தேவையானவற்றிற்குப் பயன்படுத்தினால் பல அவலங்கள் நடைபெறாது... உதாரணத்திற்கு நான் தான் போதுமான அளவு சம்பாதிக்கின்றேனே நீ ஏன் வேலைக்குப் போக வேண்டும்?, என் பணத்தில் வாழ்ந்து கொண்டு நான் சொல்வது போல் எப்படி கேட்காமலிருக்கலாம்? நான் சம்பாதிக்கின்றேன் என் ஆசைப்படி இருப்பேன், நீ சம்பாதித்து என்ன கொண்டு வந்து கொட்டறேன்னு என்னைத் தொடற? மற்றவனெல்லாம் தன் பெண்டாட்டியை எப்படியெல்லாம் வைத்துள்ளான்.. எங்கே போனது மனிதம் இந்த சொற்றொடர்களில்...? பணம் மட்டும் இருந்து விட்டாலோ, இல்லாவிட்டாலோ இவை எப்படி மாறுகின்றன...? எல்லாம் பணம் சார்ந்த ஒன்றா...?

நன்றாக சம்பாதித்தால், அழகான பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள், இதற்குப் பெண்களும் விதிவிலக்கல்ல! கல்யாண மாலை அல்லது திருமண புரோக்கர்களிடம் நடத்தப்பட்ட நேர்க்காணலில் இதை அவர்கள் கூறிய போது சிரித்துக் கொண்டேன்... அழகு, பணம் தாண்டி., காதல் திருமணத்திலோ அல்லது பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணத்திலோ என்ன பார்க்கப்படுகின்றது...? வேறு என்னத்தைத் தான் பார்க்க சொல்கின்றாய் என்று கேட்க்கலாம்..! அதான் எனக்கும் தெரியவில்லை....! மிகச் சிலரே இவற்றையும் மீறி வாழ்ந்து கொண்டுள்ளார்கள்..! அவர்களின் வாழ்வு கவிதைத்துவமாய் இருக்கக் கூடும்...! திருமணத்தில் பணம் கையாடப்படாமல் இருக்க பெண்கள் தான் முன்வந்து, அப்படிப்பட்ட ஆண்களை புறக்கணிக்க வேண்டும்(நடக்கக் கூடிய காரியமா?)

படிப்பை எடுத்துக் கொள்வோம், நல்ல பணமிருந்தால் நல்ல பள்ளி மற்றும் நல்ல பிரிவு, நல்ல வேலை திரும்பவும் பணம்... நன்றாகப் படிக்க வேண்டியது தானே என்பீர்கள், நம் பாடத்திட்டம், ஆசிரியர்கள் எல்லாவற்றையும் மீறி, படிப்பிற்கான சலுகை அதிக பட்சம் 100 பேருக்கு மேல் அரசால் வழங்கப்படுமா? 1000 பேர்...? அறிவையும் மீறி பயிற்சி என்பது அத்யாவசியமான ஒன்று... அது பணமில்லாமல் எங்கு கிடைக்கின்றது...!

மருத்துவம், ஏன் கடவுள் கூட பணமிருப்பவனுக்குத் தான்...! திருவரங்கம் கோவிலில் சென்றால் கண்கூடாகப் பார்க்கலாம், அனைத்து கோவில்களிலும் நடைபெரும் ஒன்று தான்... பணமிருப்பவன் பணம் கொடுத்து தோஷம் கழிப்பான்..! பணம் இல்லாதவன்..? அப்படியென்றால் கடவுள் பணமிருப்பவர்களுக்கு மட்டும் தானே..!

விளையாட்டு, இலக்கியம், கலை கூட பணம் சார்ந்தது என்றாலும் மிகையாகாது...! என்று பணத்தையும் மீறி மனிதம் பரவலாக செழிக்கின்றதோ அன்று தான் மனிதம் வெல்லும், மனித குலம் மேன்மையுரும்..! நிறைய பணமிருப்பவர்கள் சிலருக்கு உதவலாம், சில குழந்தைகளைப் படிக்க வைக்கலாம் அது தான் மனிதம்.. முடிந்த வரை திறமையானவர்களுக்கு உதவலாம், இதெல்லாம் தான் நான் கூறவருவது.. நான் சம்பாதித்த பணம் நான் ஏன் மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டுமென்பது நியாயம் தான் ஆனால் குழந்தைகளுக்கு, திறமையானவர்களுக்கு உதவலாம்., அது பிச்சைகாரர்களுக்கு பணம் போடுவது போலன்று... இது ஒரு சாதாரண கருத்தாக, ஈர்க்கும் ஒரு பதிவாக இல்லாவிட்டாலும் என் திருப்திக்கான ஒன்று.!

30 கருத்துகள்:

J K சொன்னது…

//பிச்சைகாரர்களுக்கு பணம் போடுவது போலன்று//

ம்.

பெயரில்லா சொன்னது…

சரி சரி ரொம்ப வருத்தப்படாதீங்க கடவுளை நம்புங்க அவர் பணம் கொடுப்பார்.

நந்தா சொன்னது…

//நான் தான் போதுமான அளவு சம்பாதிக்கின்றேனே நீ ஏன் வேலைக்குப் போக வேண்டும்?, என் பணத்தில் வாழ்ந்து கொண்டு நான் சொல்வது போல் எப்படி கேட்காமலிருக்கலாம்? நான் சம்பாதிக்கின்றேன் என் ஆசைப்படி இருப்பேன், நீ சம்பாதித்து என்ன கொண்டு வந்து கொட்டறேன்னு என்னைத் தொடற? மற்றவனெல்லாம் தன் பெண்டாட்டியை எப்படியெல்லாம் வைத்துள்ளான்.. எங்கே போனது மனிதம் இந்த சொற்றொடர்களில்...? //

வள்ளி. மிக அருமையான கேள்வி.


//அமர்ந்திருக்கும் ஆண் நண்பர்களைப்(திருமணமான) பார்க்கும் போது, அவர்களின் மனைவி அவர்களை எதிர்பார்க்க மாட்டார்களா என்று தோன்றும்//

எனக்கும் பல பேரைப் பார்க்கும் போது இதே கேள்விதான் தோன்றி இருக்கிறது.

பல கேள்விகளை அனாசயமாக வீசி விட்டுச் சென்றிருக்கிறீர்கள். பதில் தேட வேண்டியவைதான்.

PPattian : புபட்டியன் சொன்னது…

பணம், மனிதம்னு ஏதோ சொல்றீங்க.. கொஞ்சம் குழப்பமா இருக்கு..
யோசிக்கிறேன்.

மங்களூர் சிவா சொன்னது…

//
பணத்தைத் தேடும் முயற்சியில் பலவற்றை நாம் இழக்கின்றோம்... அனைத்திற்கும் பணமே மூலதனமாக உள்ளது, தேவையற்ற இடங்களிலிம் கூட..!
//
நெஜம் தான்.
Convinience at a cost.

There Is No Such Thing As A Free Lunch.

we have to compromise something for getting something.

but everything has a limit. when we exceeds that then only problem starts.

//
பணம் மட்டுமே சார்ந்த ஒன்றா திருமணமும் பந்தமும்?
//
தெரியாது.

கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங்கு எதிர்கொள்வர்-இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேணடாள்
செல்லாது அவன்வாயிற் சொல்.

//
வேற்பிலைக் கொழுந்துகள்" இருக்கும்..! கேட்டால் எதாவது "வியாக்யாணம்" கூறுவார்கள்...! அவனை இப்படிப் பழக்கினால், அவன் "கிழக்குச் சீமையிலே"யில் வருபதைப் போல் கற்பனைப் பண்ணிக் கொண்டு, அக்காவிற்கு நிறைய வரதட்சணைக்கொடுத்தாவது கட்டிக்கொடுக்க ஆசைப்படுவான்.. அதோடு நிறுத்துவானா? அவன் மனைவியிடமும் எதிர்பார்ப்பான்! அதான் ஒரு பேச்சு இருக்கின்றதே, அண்ணன், தம்பி இல்லாதா வீட்டில் பெண் எடுக்காதே என்று!
//
நல்லா ஜோசியம்லாம் பாப்பீங்க போல!!

தம்பியுடையான் படைக்கஞ்சான்னு கூடதான் சொல்லியிருக்காங்க

இப்ப மாதிரி ஒத்த ஒத்த புள்ளையாவே எல்லாரும் பெத்துகிட்டு இருந்தா சித்தப்பானா என்ன மாமான்னா என்ன அத்தைனா என்னன்னு புஸ்தகத்துலதான் புள்ளைங்க படிக்கணும்
//
என் பணத்தில் வாழ்ந்து கொண்டு நான் சொல்வது போல் எப்படி கேட்காமலிருக்கலாம்? நான் சம்பாதிக்கின்றேன் என் ஆசைப்படி இருப்பேன், நீ சம்பாதித்து என்ன கொண்டு வந்து கொட்டறேன்னு என்னைத் தொடற?
//
//
பணம் மட்டும் இருந்து விட்டாலோ, இல்லாவிட்டாலோ இவை எப்படி மாறுகின்றன...? எல்லாம் பணம் சார்ந்த ஒன்றா...?
//
ரெட்டை மாட்டு வண்டியில் ரெண்டு மாடும் சேர்ந்து இழுத்தால்தான் வண்டி முன்னால் போகும். ஒன்னு முரண்டு புடிச்சாலும் முன்னால நகராது வாழ்க்கையும் அப்படித்தான் புரிந்து நடத்தல், விட்டுக்கொடுத்தல் எல்லாம் இருந்தால்தான் இல்லறம் இனிமையாக இருக்கும்.

//
நன்றாக சம்பாதித்தால், அழகான பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள், இதற்குப் பெண்களும் விதிவிலக்கல்ல
//

இது என்ன தப்பா? அநியாயமா இல்ல. இதெல்லாம் ரொம்ப ஓவரு சொல்லிட்டேன்

//
நிறைய பணமிருப்பவர்கள் சிலருக்கு உதவலாம், சில குழந்தைகளைப் படிக்க வைக்கலாம்

அது பிச்சைகாரர்களுக்கு பணம் போடுவது போலன்று...
//
இது மட்டும்தான் கரெக்ட்

K.R.அதியமான். 13230870032840655763 சொன்னது…

வறுமைக்கு காரணமும், விளைவுகளும்

செல்வசெழிபிற்க்கு அருகமையில், கடுமையான வறுமையய் காணும் பெரும்பாலான, மனிதநேயங்கொண்டவர்கள் இந்த முரண்பாட்டிற்க்கு காரணம் முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளே என்ற தவறான முடிவுக்கு வருகின்றனர்.

இரண்டாம் உலக்ப்போரில் முற்றிலும் அழிந்த ஜெர்மனியில், 1945ல் வறுமை, பசி, வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமாக இருந்தது. சந்தை பொருளாராத கொள்கைகளை, கடும் எதிர்பிற்கிடையில் அமல் படுதிய பின் பத்தே ஆண்டுகளில் ஜெர்மனி மீண்டும் தலை நிமிர்ந்தது. "ஜெர்மன் மிராக்கில்" என்று இன்றும் போற்றப்படுகிறது.

1947இல், நம்மைவிட மிகவும் கீழ் நிலையில் இருந்த மலேசயா, சிங்கப்பூர், தைவான், தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளும் சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை பின்பற்றி இன்று நம் நாட்டை விட பல மடங்கு சுபிட்சமாக உள்ளன. சைனாவும் முதலாளித்துவ பாதைக்கு வந்து, வேகமாக வளம் பெற்று வருகிறது.

1950 முதல் இடதுசாரி, சோசியலிச கொள்கைகளை பின்பற்றியதின் விளைவாக, நாம் 1991ல் திவால் நிலையில் இருந்தோம். அரசு, தங்கத்தை அடமானம் வைத்து இறக்குமதிக்கான் டாலர்களை பெற வேண்டிய நிலை உருவானது. அதன் பிறகு, சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை அமல் படுத்தியதன் விளைவாக, இன்று மீண்டு வருகிறோம். பல கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு மேல் எழும்ப முடிந்தது. தொழில் துறையின் வளர்சியால் புதிய வேலை வாய்ப்புகளும், அரசுக்கு பெரிய அளவில் வரி வசுலும் உருவாகிறது. அதை வைத்து அரசு, பல நலத்திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. மத்திய அரசின் நிகர வரி வருமானம், 1995ல் 1,10,354 லச்சம் கோடியில் இருந்து 2007ல், 5.48,122 லச்சம் கோடியாக ஆக உயர்ந்தது. 1991இல், இரண்டு வார இறக்குமதிக்கான அந்நிய செலவாணி கையிருப்பே இருந்தது. இன்று சுமார் 100 மடங்கு அதிகரித்து, 8,64,000 கோடி ரூபாய் மதிப்பிற்க்கு டாலர் கையிருப்பு சேர்ந்துள்ளது. அந்நிய செலவாணிக்காக் I.M.F / World Bank இடம் கை ஏந்த வேண்டிய நிலை இன்று இல்லை.

ராணுவதிற்க்காக வருடம் சுமார் 93,000 கோடி ரூபாய் செலவிடுவது நமக்கு மிக அதிகமான சுமை. இது போன்ற பல சுமைகளை விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியாக நாம் அனைவரும், குறிப்பாக ஏழைகளும் சுமக்க வேண்டியுள்ளது.

இன்னும் வெகு தூரம் போக வேண்டியதுள்ளது. எழ்மை ஒழிப்பு, விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற அடிபடை வசதிகாளுக்காக அரசு பல லச்சம் கோடி ரூபாய்கள் செலவிட்டாலும், அதில் பெரும்பாண்மையான தொகை அரசு எந்திரத்தாலும், அரசியல்வாதிகளாளும் திருடப் படுகிரது. அரசு மான்ய தொகை, பணக்கார விவசாயிகளுக்கே பெரும்பாலும் சேர்கிரது. உண்மையான ஏழைகளுக்கு இவை கிடைக்கும்படி செய்ய, ஊழல்மயமான நம் அரசு எந்திரத்தை சீர் படுத்த வேண்டும். அதுவே நமக்கு முதல் வேலையாகும். அதை செய்யாமல், வறுமைக்கு காரணமாக முதலாளித்துவ பொருளாராதார் கொள்கைகளை காரணமாக காட்டுதல் தவறு.
--------------------

விலைவாசி ஏன் உயர்கிறது ?

நமது ரூபாயின் வாங்கும் திறன், 1947 இருந்ததை விட இப்போது சுமார் 160 மடங்கு குறைந்துள்ளது. அதாவது 1947 இன் ஒரு ரூபாய் இன்று 160 ருபாய்க்கு சமம். இதற்கு முக்கிய காரணம், அரசு நோட்டடித்து செலவு செய்ய்வதே ஆகும்.

சாதரணமாக பொருட்க்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அல்லது உற்பத்தி குறையும் போது, விலை ஏறுகிறது. மாற்றாக, புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு மிக அதிகமானால் பணவீக்கம் ஏற்படுகிறது ; அதாவது அரசாங்கம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து செலவு செய்யும் போதும் விலைவாசி ஏறும்.

மத்திய பட்ஜட்டில் பல விதமான செலவுகளால், இப்போது ஆண்டுக்கு சுமார் 1.6 ல்ட்சம் கோடி துண்டு விழுகிறது. இதில், அரசாங்கம் ஒரு 70 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது. மிச்ச்திற்க்கு (சுமார் 90,000 கோடி ரூபாய்) நோட்டடித்து செல்வு செய்கிறது. பணவீக்க்ம் உருவாகி விலைவாசி ஏறுகிறது. மிக அதிகமான ரூபாய் நோட்டுகள் மிக குறைவன எண்ணிக்கையில் உள்ள பொருட்க்களை துரத்தும் போது பொருட்க்களின் விலை ஏறுகிறது. புதிதாக உற்ப்பத்தி செய்ய முடியாத பண்டங்களான நிலம், ரியல் எஸ்டேட் போன்றவை மிக அதிகமாக விலை ஏறுகிறது.

வட்டி விகிதம், விலைவாசி உயர்வின் விகிததை ஒட்டியே மாறும். வட்டி என்பது, பணத்தின் வாடகையே. பணத்தின் மதிப்பு குறைய குறைய, வட்டி விகிதம் அதற்கேற்றாற் போல் உயரும். கந்து வட்டி விகிதம் பல மடங்கு அதிகரிக்க இதுவே காரணம்.

1930களில் காந்தியடிகள் கதர் இயக்கத்திற்காக வங்கியிலிருந்து 5 சதவித வட்டிக்கு கடன் வாங்க முடிந்தது. அன்றய பணவீக்கமும், விலைவாசி உயர்வும் அப்படி இருந்தன. பற்றாகுறை பட்ஜெட்களின் விலைவாக 1950 முதல் 1990கல் வரை பணவீக்கமும். விலைவாசியும், வட்டிவிகிதமும் தொடர்ந்து ஏறின.

ஊதியம் போதாதால், தொழிளாலர்கள் மற்றும் ஏழைகள் மிகவும் பாதிப்படைகிறார்கள். ஏழைகள், தங்கள் குழந்தைகளை தொழிலாளர்களாக அனுப்புகின்றனர். அதிக வட்டி விகிததில், கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை. கூலி / சம்பள் உய்ரவு கேட்டு போராட வேண்டிய நிலை. அதனால் உற்பத்தி செலவு அதிகரித்து, விலைவாசி மேலும் உயர்கிறது. சம்பளம் போதாமல் அரசாங்க ஊழியர்கள் லஞ்சம் வாங்க முற்படுகின்றனர்.

ஜெர்மனி போன்ற நாடுகள் பணவீக்கதை மிகவும் கட்டுபடுத்தி விலைவாசியை ஒரே அளவில் வைத்துள்ள்ன. அதனால் அங்கு சுபிட்சம் பொங்குகிறது. இங்கோ வறுமை வாட்டுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்ல்லை.

அரசின் வெட்டி செலவுகளுக்காக, பொது மக்கள் விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியை சுமக்க வேண்டியுள்ளது. ஆனால் அடிப்படை பொருளாதார அறிவு இல்லாத இடதுசாரிகளோ தொழில் அதிபர்களையும், முதலாளிகளையும் காரணமாக சொல்கின்றனர்.

லார்டு கீய்யினஸ் சொன்னது : "..ஒரு நாட்டின் ஒழுக்கதையும், உயர்ந்த குணத்தைய்யும் அழிப்பதற்க்கு சிறந்த வழி என்ன்வென்றால், அந்நாட்டின் நாணய மதிப்பை வெகுவாக சீரழிப்பது மூலம்...." ; நாம் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இதை என்று உணர்வோம் ?

http://nellikkani.blogspot.com/

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

இத்த்னை சிறிய வயதில் எத்தனை பெரிய சிந்தனை!

cheena (சீனா) சொன்னது…

காசை மையமாக வைத்து எழுதப்பட்ட இடுகை. எளிய நடையில் தங்களின் எண்ணங்கள் மிளிர்கின்றன. வாழ்த்துகள் வள்ளி!!

பெயரில்லா சொன்னது…

Good article. Nothing is enough for a human mind. If one got good job, he then wants promotion...if one got to be millonaire next he wants to be a millonaire....it's not individual's fault...our society's fault. Every one is going that way...every one is leading that way....is there any other way?

பொன்ஸ்~~Poorna சொன்னது…

//அழகு, பணம் தாண்டி., காதல் திருமணத்திலோ அல்லது பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணத்திலோ என்ன பார்க்கப்படுகின்றது...? வேறு என்னத்தைத் தான் பார்க்க சொல்கின்றாய் என்று கேட்க்கலாம்..! அதான் எனக்கும் தெரியவில்லை....! //
இந்தக் கேள்வி எனக்கும் இருக்குங்க வள்ளி.. யாராச்சும் தெரிஞ்சவங்க தான் சொல்லணும்..

இ.கா.வள்ளி சொன்னது…

நன்றி ஜெ.கெ, அனானி, நந்தா மற்றும் புபட்டின்...

இ.கா.வள்ளி சொன்னது…

சிவா, உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி, அத்யமான் பெரிய ஒரு பதிவு போல் கொடுத்துள்ளீர்கள் நன்றி, siva gnanamji எந்த வயதில் பிறகு இதையெல்லாம் யோசிக்க வேண்டும்..? வருகைக்கு நன்றி... பூர்ணா வாங்க, பின்னூட்டத்திற்கு நன்றி..

பொன்வண்டு சொன்னது…

// மருத்துவம், ஏன் கடவுள் கூட பணமிருப்பவனுக்குத் தான்...! திருவரங்கம் கோவிலில் சென்றால் கண்கூடாகப் பார்க்கலாம், அனைத்து கோவில்களிலும் நடைபெரும் ஒன்று தான்... பணமிருப்பவன் பணம் கொடுத்து தோஷம் கழிப்பான்..! பணம் இல்லாதவன்..? அப்படியென்றால் கடவுள் பணமிருப்பவர்களுக்கு மட்டும் தானே..! //

கடவுள் எல்லோருக்கும் பொதுதான். அன்பே சிவம் படத்தில் வரும் வசனம் ஒன்று எனக்கு மிகவும் பிடிக்கும். "காசு கொடுப்பதால் ஒருவனுக்கு ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொடுத்தால் அவர் கடவுள் அல்ல. கூலி.". எல்லாம் நம் மனதில் தான் இருக்கிறது. நாம் நல்லது செய்தால் கடவுள் நமக்கும் நல்லது செய்வார் என்று எண்ணுவதே சரி. அதை விடுத்து உண்டியலில் பணம் போடுவதும், குடம் குடமாகப் பாலாபிசேகம் செய்தாலும் அதில் நமது சுயநலமே ஒளிந்திருக்கிறது என்பது அந்தக் கடவுளுக்குத் தெரியாதா என்ன?

மங்களூர் சிவா சொன்னது…

@பொன்வண்டு
//
எல்லாம் நம் மனதில் தான் இருக்கிறது. நாம் நல்லது செய்தால் கடவுள் நமக்கும் நல்லது செய்வார் என்று எண்ணுவதே சரி. அதை விடுத்து உண்டியலில் பணம் போடுவதும், குடம் குடமாகப் பாலாபிசேகம் செய்தாலும் அதில் நமது சுயநலமே ஒளிந்திருக்கிறது
//
ரொம்ப கரெக்டா சொன்னீங்க பொன்வண்டு எந்த சாமியாவது எனக்கு அத பண்ணு இத பண்ணுன்னு கேக்குதா?

கொழுப்பெடுத்து போய் எல்லாத்தயும் நாம பண்ணிட்டு காசு இருந்தாதான் கடவுள் கூட அப்படின்னு நாத்திகம்லாம் பேசக்கூடாது.

இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்.

'உயிர்' அப்படிங்கறது எப்படி நேரில் பார்க்க முடியாது ஆனால் அந்த உயிர் போய் விட்டால் அது பிணம்.

உயிரை கொண்டுவந்து என் முன்னாடி நிறுத்து அப்பதான் நம்புவேன்னு சொன்னா எப்படி அது போலதான் கடவுளும்.

கடவுள் தேடப்படவேண்டியவர் அல்ல உணரப்பட வேண்டியவர். ஸ்ரீரங்கம், திருப்பதியெல்லாம் போக தேவையில்லை உங்க வீட்டிலயே கும்பிடலாம்.

குசும்பன் சொன்னது…

"இது ஒரு சாதாரண கருத்தாக, ஈர்க்கும் ஒரு பதிவாக இல்லாவிட்டாலும் என் திருப்திக்கான ஒன்று.!"

உண்மைய சொல்லனும் என்றால் திரும்ப திரும்ப ரெண்டு முறை படித்துவிட்டேன், என்னை ஈர்த்தது. நிறைய யோசிக்க வைத்துவிட்டீங்க!!!!

இ.கா.வள்ளி சொன்னது…

குசும்பன் நன்றி, அவ்வளவாக ஈர்க்காத ஒன்று தான் இந்த தலைப்பும் கட்டுரையும்... ஆயிரம் எழுதினாலும், பேசினாலும் அடிப்படையான ஒன்று என்னவென்றால் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவு ஆவது தான்.. உதவி செய்வதின் மூலம் சிறிய அளவிலாவது மாற்றம் கொண்டு வரலாம் என்பது என் கருத்து...

இ.கா.வள்ளி சொன்னது…

//'உயிர்' அப்படிங்கறது எப்படி நேரில் பார்க்க முடியாது ஆனால் அந்த உயிர் போய் விட்டால் அது பிணம்.

உயிரை கொண்டுவந்து என் முன்னாடி நிறுத்து அப்பதான் நம்புவேன்னு சொன்னா எப்படி அது போலதான் கடவுளும்.
//

அப்படினா, ஆடு, மாடுகள் கூடத்தான் கடவுள் இருப்பதை உணர வேண்டும்... அறிவால் மட்டுமே உணரப்பட்டால் அது நிச்சயம் ஒரு மன கட்டுப்பாடு அம்சமாகவே இருக்கமுடியும்.. கடவுள் என்பது மனிதனுக்கான ஒன்றா..? உயிரினக்களுக்கானதா..?

பொன்வண்டு சொன்னது…

// அப்படினா, ஆடு, மாடுகள் கூடத்தான் கடவுள் இருப்பதை உணர வேண்டும்... அறிவால் மட்டுமே உணரப்பட்டால் அது நிச்சயம் ஒரு மன கட்டுப்பாடு அம்சமாகவே இருக்கமுடியும்.. கடவுள் என்பது மனிதனுக்கான ஒன்றா..? உயிரினக்களுக்கானதா..? //

இப்படியெல்லாம் திடீர்னு கேட்டா எப்படி? குழந்தையாயிருக்கும் போதே கடவுள் நம்பிக்கையை சொல்லியிருக்கிறார்கள் வீட்டில். எனவே அந்த நம்பிக்கையையும் விடமுடியாது. பகுத்தறிந்து பார்த்தால் கடவுள் எல்லாம் கிடையாது என்றே ஒருபுறம் தோன்றுகிறது. அதையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஏனென்றால் சிறு வயதில் ஏற்பட்ட கடவுள் நம்பிக்கை.

சிறுவயதில் ஏற்பட்ட நம்பிக்கையை ஆராய்ந்தால் அதில் பல ஓட்டைகள். வாராவாரம் கோவிலுக்குப் போ, விளக்கேற்றி வழிபடு எதாவது தோஷம் இருந்தால் பரிகாரம் செய்
என்றெல்லாம். நமக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் பகுத்தறிவினால் கடவுளை ஆராயும் போது ஒரு கடவுள் எல்லா மக்களையும் சமமாக அல்லவா நினைக்க வேண்டும்? அவர் எதற்கு சிலருக்கு மட்டும் துன்பங்களைத் தருகிறார்? வெள்ளிக்கிழமை எலுமிச்சையில் விளக்கேற்றினால் துன்பங்களை நீக்குவார் என்பதெல்லாம் சும்மா (எலுமிச்சையில் விளக்கேற்றினால் கடவுளுக்கு என்ன கிடைக்கப்போகிறது? அவர் என்ன அவ்வளவு அல்பமா?) என்றெல்லாம் தோன்றுகிறது.

எனவே கடவுள் நம்பிக்கையையும் விடமுடியாமல் பகுத்தறிவையும் விடமுடியாமல் கடவுளுக்குப் புதிய அர்த்தம் கொடுக்கிறோம்.

அதுதான் "கடவுள் எல்லோரையும் சமமாக நினைக்கிறார். அவருக்கு இந்த சடங்குகள் எல்லாம் தேவையில்லை. நமக்கு நாம் நல்லவனாக இருந்தால் - மனசாட்சிக்கு விரோதமின்றி - கடவுளே நம்மை ஏற்றுக்கொள்வார்" என்று கடவுள் நம்பிக்கையையும், பகுத்தறிவையும் சேர்த்து ஒரு புதிய விளக்கம் தரவேண்டியிருக்கிறது.

நானும் கடவுள் நம்பிக்கைக்கும், பகுத்தறிவுக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமாகும் ஒருவன்தான்.

K.R.அதியமான். 13230870032840655763 சொன்னது…

/////அழகு, பணம் தாண்டி., காதல் திருமணத்திலோ அல்லது பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணத்திலோ என்ன பார்க்கப்படுகின்றது...? வேறு என்னத்தைத் தான் பார்க்க சொல்கின்றாய் என்று கேட்க்கலாம்..! அதான் எனக்கும் தெரியவில்லை....! //
இந்தக் கேள்வி எனக்கும் இருக்குங்க வள்ளி.. யாராச்சும் தெரிஞ்சவங்க தான் சொல்லணும்..////

அக அழகு அல்லது குணம்

matching of horoscopes is used for this in arranged marriages !! (but with not very satisfactory results !!)

இ.கா.வள்ளி சொன்னது…

//அக அழகு அல்லது குணம்

matching of horoscopes is used for this in arranged marriages !! (but with not very satisfactory results !!)//

பார்க்கின்ற 5 நிமிடங்களில் அக அழகை, குணத்தைக் கண்டுபிடித்துவிட முடியுமா? அல்லது இன்றைய வேகமான யுகத்தில் பக்கத்து வீட்டுப்பெண்கள் எப்படியுள்ளார்கள் என எத்தனை பேர் பார்க்கின்றார்கள். அல்லது நிறைய பேர் வெளி மாந்லங்களில்/நாடுகளில் வேலை பார்க்கின்றார்கள்...!(பக்கத்தில் பெண்/ஆண் னைப்பற்றி விசாரிக்கும் பட்சத்தில்)

ஜாதகம்/ஜோசியம் என்பதெல்லாம் (உண்மையாக இருக்கும் பட்சத்தில்) பெரிய கணக்கு மற்றும் கலை, அதனை மிகச்சரியாக கணிக்கின்றவர்கள் பெரும்பாலும் இன்று இல்லை... அப்படியே இருந்தாலும் மிகச் சொல்ப்பம் தான்...!

நான் அதெல்லாம் பார்த்து செய்யும் திருமணங்களும் பிரிகின்றனவே என்று கேட்கவில்லை... ஆனால் குணம் மற்றும் அக அழகெல்லாம் நாம் கணிக்க முடியுமா தெரியவில்லை... ஜாதகம்/ஜோசியம் சரியாக இருப்பதால் மட்டுமே அழகில்லாத/பணமில்லாத ஒருத்தன்/ஒருத்தி யின் திருமணம் நடைபெருமா? என்ன சார் லாஜிக் நான் எழுதியுள்ள கருத்திற்கு பொருந்தவே இல்லையே....?

பெயரில்லா சொன்னது…

valli... ur a feminist. But at the same time ur worrying about the guys sitting at office. here you got to understand... guys are sacrifying their life, time and health to keep their family and kids more happier. As the inflation goes up the cost of relation also goes up. So the sacrifice of guys are also more demanding now a days. When guys ahve so amny probs ur blaming them with out a concern. Ilusions are different, extreme exmapes are different. In general everyone works hard and respects others to live happily in this world. When ur glasses are green... world will appear more warm place to live and enjoy. If its red, no one can help it unless its u.

இ.கா.வள்ளி சொன்னது…

//guys are sacrifying their life, time and health to keep their family and kids more happier. //

நீங்கள் பணத்தாலும், தேவைகளை பூர்த்தி செய்வதாலும் மட்டுமே உங்கள் குடும்பத்தை இன்பமாக வைத்திருக்க முடியுமா? நான் உங்களை(ஆண்களை)மட்டும் திட்டியோ, குறை கூறியோ இந்த பதிவில் எழுதவில்லை...

நீங்கள் கூறியிருப்பது என் கட்டுரையை நியாயப்படுத்துகின்றது, நீங்கள் "refer" செய்யும் இன்பம் கூட பணத்தைச் சார்ந்ததாக மட்டுமே உள்ளது... என் கேள்வியே பணத்தை மீறி பந்தங்களும், உறவுகளும் அர்த்தமுள்ளதாகுமா என்று தான்...

//In general everyone works hard and respects others to live happily in this world. When ur glasses are green... world will appear more warm place to live and enjoy. If its red, no one can help it unless its u.
//
அதெல்லாம் சரி தான், கண்ணாடியெல்லாம் எடுத்துக் கொள்ளலாம் அனால் அந்த கண்ணாடியைக் கூட ஆண்கள் தான் வாங்கிக் கொடுக்க வேண்டுமென்ற நிலையில் தான் பெண்ணியம் வருகின்றது...

பெயரில்லா சொன்னது…

Lot of Tamil Spelling mistakes in your writings.... try to to correct it

Thanks

K.R.அதியமான். 13230870032840655763 சொன்னது…

//பார்க்கின்ற 5 நிமிடங்களில் அக அழகை, குணத்தைக் கண்டுபிடித்துவிட முடியுமா? ///

this is for love marriages. but most people are unable to assess such inner worth. and proverb "all that glitters is not gold" is very relevant..

and i meant about horoscopes for 'arranged' marriages. (does that mean, these lack 'love' !!!)

இ.கா.வள்ளி சொன்னது…

//and i meant about horoscopes for 'arranged' marriages. (does that mean, these lack 'love' !!!)//
நானும் அதையே தான் சொகின்றேன், பெற்றோர் பார்க்கும் திருமணம் தான்...

ஆனால் குணம் மற்றும் அக அழகெல்லாம் ஜாதகம்/ஜோசியம் பார்த்து நாம் கணிக்க முடியுமா தெரியவில்லை... ஜாதகம்/ஜோசியம் சரியாக இருப்பதால் மட்டுமே அழகில்லாத/பணமில்லாத ஒருத்தன்/ஒருத்தி யின் திருமணம் நடைபெருமா? என்ன சார் லாஜிக் நான் எழுதியுள்ள கருத்திற்கு பொருந்தவே இல்லையே....?

இ.கா.வள்ளி சொன்னது…

//பார்க்கின்ற 5 நிமிடங்களில் அக அழகை, குணத்தைக் கண்டுபிடித்துவிட முடியுமா? //

பெற்றோர் பார்க்கும் திருமணத்தில் தான் 5 நிமிடம் ஆணும் பெண்ணும்ப் பார்த்து முடிவு செய்கின்றார்கள்.. 5 நிமிடத்தில் காதல் வயப்பட்டாலும், பொருந்தாத குணமென்றால் முறியும் காதலும் இங்கு அதிகம் தான்...

K.R.அதியமான். 13230870032840655763 சொன்னது…

///ஆனால் குணம் மற்றும் அக அழகெல்லாம் ஜாதகம்/ஜோசியம் பார்த்து நாம் கணிக்க முடியுமா தெரியவில்லை... ஜாதகம்/ஜோசியம் சரியாக இருப்பதால் மட்டுமே அழகில்லாத/பணமில்லாத ஒருத்தன்/ஒருத்தி யின் திருமணம் நடைபெருமா? என்ன சார் லாஜிக் நான் எழுதியுள்ள கருத்திற்கு பொருந்தவே இல்லையே....?//

I am an ametuer astrologer. Traditional hindus use horoscope matching to confirm wedlock. i meant it is the only other way for them to make sure after assesing all other factors. even today it is happening.

இ.கா.வள்ளி சொன்னது…

//I am an ametuer astrologer. Traditional hindus use horoscope matching to confirm wedlock. i meant it is the only other way for them to make sure after assesing all other factors. even today it is happening.//

அய்யா, நான் ஜாதகம்/ஜோசியம் பொய் என்று எங்கும் கூறவில்லை,
ஜாதகம்/ஜோசியம் சரியாக இருப்பதால் மட்டுமே அழகில்லாத/பணமில்லாத ஒருத்தன்/ஒருத்தி யின் திருமணம் நடைபெருமா?

என்று மட்டும் தான் கேட்டேன்... அதற்கு பின்பும், இவைதான் இங்கு முக்கியமென்பதே என் கருத்து...

முகவை மைந்தன் சொன்னது…

//இரவு 9.30 மணிவரைக் கூட அலுவலகத்தில் அமர்ந்திருக்கும்//

என்னங்க, தினமும் காலைல 7.20 அலுவலக வண்டியைப் புடிச்சு நள்ளிரவு தாண்டி திரும்பி இருக்கோம், 9.30 யைப் போயி பெருசா சொல்லிக்கிட்டு. இப்ப எகிறிட்டேன்னு வச்சுக்கங்க. நீங்க பன்னாட்டு நிறுவனத்துல தானே வேலை பாக்குறீங்க?

கடவுளைப் பத்தி என்ன சொல்ல. துன்பம் நேர்கையில் புலம்பித் தீர்க்க ஒருவன். அவ்வளவு தான். வெளில சொல்ல தன்னிலை (ego) இடம் கொடுக்காதுல்ல.

//பணம் எல்லாவற்றையும் கொடுக்காது/கொடுக்கின்றது என்பதால் தான் இத்தனை சமூக அவலங்கள்//
யாருக்குத் தான் இது தெரியாது? ஆனாலும் பசையப்பர் இல்லைனா, ஓடப்பர்னு தானே சொல்றாங்க.

//பணம் என்ற ஒன்றில்லை என்றால், அல்லது அதைத் தேவையானவற்றிற்குப் பயன்படுத்தினால் பல அவலங்கள் நடைபெறாது//
நீங்க என்ன, ideal நிலைல வச்சே பேசுறீங்க. effciency எப்பவுமே 100 விழுக்காடு கிடைக்காது. அதுவும் அமைப்புல கோளாறு இருந்தா சுஉழி தான் கிடைக்கும்.

//நன்றாக சம்பாதித்தால், அழகான பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள்//
இல்லாவிட்டாலும் அப்படித்தான் ஆசைப்படுவார்கள். பணமிருந்தால் ஆசையைச் சொல்வார்கள். அப்புறம், இங்க அழகுன்னா வெள்ளைன்னு ஒரு (தவறான) பொருளுண்டு, தெரியும்ல.

//திருமணத்தில் பணம் கையாடப்படாமல் இருக்க பெண்கள் தான் முன்வந்து, அப்படிப்பட்ட ஆண்களை புறக்கணிக்க வேண்டும்(நடக்கக் கூடிய காரியமா?)//

ஒருவேளை நடக்கலாம். வேலை பார்க்கும் பெண்கள், வேலை இல்லாத வாலிபர்களை காலத்தே திருமணம் செய்யும் போது.

இறுதிப் பகுதி ஏட்டுச்சுரைக்காயாக உள்ளது. கட்டுரைக்குத் தான் ஒத்து வரும். பல்வேறு காரணிகள் நிறைந்த சங்கதி.

லக்கிலுக் சொன்னது…

ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ கல்யாணம் மட்டும் தான் ஒரே வழி என்பதாக நம் சமூகம் கட்டமைத்திருக்கிறது. மாற்றுவழிகளை தேடவேண்டிய அவசியம் இளையதலைமுறைக்கு இருக்கிறது.