16 ஆகஸ்ட், 2007

நடந்தாய் வாழி காவேரி

காவேரி என்றாலே பிரச்சனை என்பதை மட்டுமே அறிந்திருந்த பெங்களூர்-திருச்சி வாசியான நான் காவேரியின் பசுமை ஆட்சியைக் கண்டு மலைத்து நிற்கிறேன்.. ஆம் இனிய மழை நாளில் கூர்க்கை(குடகு) நோக்கிய ஒரு மறக்க இயலாத பயணத்தை காவேரி தான் எனக்குத் தந்தது.

மார்கழியில் காஷ்மீர் போல், மழை நாளில் குடகை நோக்கிய பாதைகளும், குடகும் முழுமையானது. பசுமை ஆட்சி செய்து கொண்டு தளிர் நடை போடும் காவேரி தான் எத்தனை அழகு, பசுமையையும், செழிப்பையும் கொட்டிக் கொடுக்கும் வள்ளல் அவள்... அவளை எதிர் கொண்ட பாதைகளிலெல்லாம் பசுமையை மட்டுமே காண முடிகிறது...

மைசூரைத் தாண்டிய கணத்திலிருந்து, குடகை நோக்கிய பாதையில் இரு புறமும் பசுமை, பசுமை, பசுமை மட்டுமே... எந்த வயலும் வெறுமையில்லை, காய்ந்தில்லை.. அவர்களின் செழிப்பு வயல்களிலேயே தெரிகிறது.. சோளம், காப்பி, கேள்வரகு என்று ஏதாவது பயிர்கள்.. பச்சை பசேலென மனதைப் பறித்தது

குடகிற்கு 50 கிலோ மீட்டர் முன் திபெத் மக்களுக்காக நம் அரசு கொடுத்திருக்கும் பகுதி வருகிறது.. அவர்கள் எப்போதும் பூசை செய்து கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு கொடுத்த பூமியை அவர்கள் பங்கிற்கு சுவர்க்க பூமியாக செய்திருக்கிறார்கள்.. கோல்டன் டெம்ப்பிலில் பல வெளி நாட்டினரைப் பார்க்க முடிகிறது.. நம் கோயில்களில் சிற்பங்களைப் போல், அவர்களும் சுவர்களில் ஓவியங்கள் வரைந்துள்ளனர்.. புத்தர் சிலைகள் எப்போதும் போல பெரியதாக உள்ளன அவர்கள் செய்யும் பூசை பிரம்மாண்டமாக, அழகாக உள்ளது... மடம் உள்ளது., ஆண்கள் மட்டுமே உள்ளனர்(....!!).. சிறு குழந்தைகளிலிருந்து, முதியோர்கள் வரை உள்ளனர்..

அதன் பிறகு 10 கிலோ மீட்டர் தொலைவில் காவேரி சுற்றிக்கொண்டு ஓடுகிறது.. அதை சுற்றுலாத் தாலமாக செய்துள்ளனர்.. அதன் பிறகு ஒரு 15 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு அணையும் ஊள்ளது.. கிருஷ்ண ராஜ சாகருக்கு முன்பு உள்ள ஒரு அணை அது... மழை பொய்க்காமலிருந்தால் அது தேவையற்றதோ எனுமளவு வழியெங்கும் மழை..

காவேரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை என்பதால் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.. அந்த மழையில், மலையில் இயற்கைக் காட்சிகள் மனதைக் கொள்ளை கொண்டது... இரு புறங்களிலும் மலை, மழை மேகங்கள், பசுமையான, பனி மூடிய மலை உச்சி, அதே போல் ஒரு மலையில் பயணிக்கிறோம் என்பதே இன்பம்...மனதில் ஒரு சிலிர்ப்பு...

ஆம், மழை மேகங்களுடன் பயணித்தது, நீர்த்துளியாகாத ஈரம் உணர்ந்து, பனி மூடிய மலையில், எனை மூடிய பனியில் குளிர்ந்து.. தூரத்தில் தெரியும் மலை பார்த்து, அது போலொரு மலையில் நிற்கிறோமென குதூகலித்து.. அந்த உணர்வுகளை சொல்ல வார்த்தைகளில்லை....... பெங்களூர் போல் குளிரவில்லை, பனி மூட்டத்தால் மூடிய சாலைகளை விட, மழை மேகங்களால் மூடிய சாலைகள் ரசிக்கத்தக்கவை...

எனை கடந்து போன மேகங்கள், நான் கடந்து போன மேகங்கள், என்னிடம் ஒட்டிக் கொண்ட ஈரம் என அனத்தும் என் இருதி வரை கூட வருமோவென்றிருந்தது... இவையனைத்தும் பொழியும், பெருகி வழியும், வழிந்து சிற்சிறு ஓடங்களாய்(....?) குவியும்.. கண்கள் இது தான் காவேரியா எனப் பல முறை சந்தேகித்தது.. கிலோ மீட்டரில் இரு பக்கங்களையும் தொட்டுக்கொண்டோடும் காவேரியையே பார்த்த எனக்கு, 100 மீட்டரில் பல காவேரியோ என்றே தோன்றியது... நதி மூலம் பார்க்கக்கூடாது....!

குடகு மலையிலிருந்து 40 கிலோ மீட்டரில் தலைக்காவேரி(!).. சிறியதாய் ஓடுவதைக் காட்டி இதே தலைக் காவெரி என்றனர். அங்கு வேரு எதும் சிறப்பாக இல்லை... மழை நாளில் சென்றதால் சுவர்கமாகப் பட்டது... குடகில் அருவிகள் இருந்தது.. அழகான காட்டுப் பகுதியில் அருவிகள்... வீடுகளில்லாமல், பெரிய கடைகளோ, கட்டடங்களோ இல்லாமல்,கணிணியில்லாமல், மலைகளை, காடுகளைக் காணவே இன்பமாயிருந்தது..

ஆறு மாதங்கள் கூட விடாமல் மழை பொழியுமாம், அந்த மக்களின் அன்றாட வாழ்வில் தான் எத்தனை துன்பங்கள்.. மின்சார இணைப்பு துண்டித்து, தொலை பேசி இணைப்பும் துண்டித்து துன்பப்படுகின்றனர்.. ""எங்கள் ஊரில் பொழியும் மழையை நாங்கள் ஏன் தர வேண்டும்"" என்ற கன்னட மக்களின் கேள்வி, நியாயமோ என்று ஒரு நொடி (மட்டும்) தோன்றியது...

அங்கிருக்கும் திரையரங்குகளில் தமிழ் படங்கள்., கேட்டால் அங்கிருக்கும் பெரிய, பெரிய எச்டேட்டுக்கள் பல சென்னை வாசிகளுடையது என்றனர்.. நல்ல உணவும் கிடக்கிறது.. அடிக்கடி படப்பிடிப்பு நகக்கிறது.. எப்போதும் மழை பொழிகிறது....!

கைப்பேசியில் வைத்திருந்த சிலப்பதிகாரத்தில் காவேரியின் எழிலைப் படித்துக் கொண்டே, காவேரியுடன் கைக்கோர்த்து நடந்ததைப் போல், அதனுடனே நடந்தப் பொழுதுகள்.... "முங்காரு மலை" என்ற கன்னட படத்தில் வந்த பிரபலமான பாடலைக் கேட்டுக் கொண்டே குடகில் நடந்த பொழுதுகள்..(அங்கே படப்பிடிப்பு நடந்தது..)... அடாது பெய்த மழையிலும், விடாது நனைந்து சுற்றித்திரிந்த காலங்கள்.. மனதில் என்றும் நீங்காத ஒரு நிகழ்வு..

என் ஊரில் கூட காவேரி பாய்கிறது, இத்தனை பசுமையா காண்கிறது என்ற கேள்வி சற்றே பொறாமையை, என் மனதில் சிறு தூரலாய் தூவியது... ஆனால் காவேரி இல்லாமல் என் ஊரை நினைத்தும் பார்க்க முடியவில்லை... காவேரி அங்கும், இங்கும் செல்லுமிடமெல்லாம் பசுமையை, அழகுகளைக் கொடுக்கிறது... அணைகளெனும் விபத்தில் சிக்கினாலும், போராட்டக்காரர்களின் சொல்லில் தயங்கினாலும், என் ஊர் மக்களை மனதில் கொண்டோ, இயல்பாகவோ, நடந்தாய் வாழி காவேரி...நடக்கிறாய் வாழ்க காவேரி...

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

valli avargale,

T.J-i kanmun-konduvanthu-in small measure niruthivittirgal.

Two years back,read an account of rafting/rowing thro cauvery from start to finish by two oxford pros-ur article reminded that.
anon

இ.கா.வள்ளி சொன்னது…

நான் கூட, ரொம்ப மோசமா எழுதிட்டோனோ என்று பயந்தேன்.. ஒரு பின்னோட்டமும் இல்லை :(

இப்ப தான் சமாதானமா இருக்கு.. பினூட்டத்திற்காக எழுதுவதில்லையென்றாலும் கொஞ்சமாக மனது அடித்துக் கொள்கிறது தான்... உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி...

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

"நடந்தாய் வாழி காவேரி!"-எனும்
பயண இலக்கியத்தை சிட்டியும்,சிவபாதசுந்தரமும் அல்லது
தி.ஜானகிராமனும் எழுதியுள்ளனர்.
காவேரி தோன்றுமிடத்திலிருந்து, முடியும் இடம்வரை பயணித்து (நடந்து ?) எழுதப்பட்டது, இந் நூல்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

hi VALLI,

naan mellina valli.

naachiyaar.blogspot.
romba nallaa ezhuthi irukkiingga.
naangga kudakup pakkam vanthu 35 varudangaL aakivittathu.
antha ninaivai arumaiyaaka malarac seythu vittiirkaL.
mikuntha nanRi,.
thamizh kalappai illai. adhanaal aanggilaththil pinnoottukiREn.